Wednesday, August 13, 2008

வரலாற்றில் ஒரு திருப்பம்!

அ.இ.அ.தி.மு.க. கட்சி தி.மு.க.வுடன் இணைந்தது!
வியப்பிலும் வியப்பு!

இன்று (13/8/08) காலை 6-30 மணிக்கு அ.இ.அ.தி.மு.க.பொதுச்செயளலாளர்
செல்வி செயலலிதா தனது தோழி சசிகலாவுடன் முதல்வரின் கோபாலபுரம் இல்லத்திற்குச் சென்றார்.உடனெ விரைந்து கீழே இறங்கிவந்த முதல்வர் கலைஞர் இருவரையும் மாடியில் உள்ள தமது அலுவல் அறைக்கு அழைத்துச் சென்றார்.அவரது துணைவியார் தயாளு அம்மாளும் புதல்வி திருமதி.செல்வியும் உடன் சென்றனர்.
அ.இ.அ.தி.மு.க. உடனடியாகக் கலைக்கப்படுவதாகவும் தி.மு.க.வுடன் எவ்வித
நிபந்தனையும் இன்றி இணைக்கப்படவேண்டும் எனக் கட்சியின் ஆட்சிக்குழுவும் பொதுக்குழுவும் நேற்று நள்ளிரவில் தீர்மானம் இயற்றியிருப்பதாகவும் செல்வி செயலலிதா, முதல்வரும் தி.மு.க.தலைவருமாகிய கலைஞர் கருணாநிதியிடம் தெரிவித்தார்.
இதனை உடனடியாக ஏற்றுக்கொண்ட கலைஞர் இப்படி ஒரு சூழல் ஏற்படவிருக்கிறது எனத் தமக்கு முன்னரே தெரியும் என்றும்
இதனை எதிர்பார்த்துத் தி.மு.க.ஆட்சிக்குழுவும் பொதுக்குழுவும்
அத்தகைய சூழலில் இருகட்சிகளும் இணைவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளத் தமக்கு அதிகாரம் வழங்கி ஒரு தீர்மானத்தை 10/8/'08 அன்று நடைபெற்ற ஆட்சிக்குழு,பொதுக்குழுக்கூட்டங்களில் நிறைவேற்றியுள்ளதாகவும் கூறினார்.
இவர்களின் சந்திப்பு நடந்துகொண்டிருந்த சூழலில் பேராசிரியர் அன்பழகன்,ஆற்காடு வீராசாமி,துரைமுருகன்,வீரபாண்டி ஆறுமுகம் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களும் மு.க.ச்டாலின்,மு.க.அழகிரி,கனிமொழி முதலான
கலைஞரின் பிள்ளைகளும் அங்குக் கூடிவிட்டனர்.
அ.இ.அ.தி.மு.க.வின் தலைவர்கள்,முன்னாள் அ.இ.அ.தி.மு.க. அமைச்சர்கள்
என்று கூட்டம் கட்டுக்கடங்காமல் கூடியதாகல் காவல்துறை திணறிவிட்டது என்றே கூறவேண்டும்.

No comments: